Sunday, September 18, 2011
Monday, August 22, 2011
இந்தியா 2041
படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தேன். கண்களை திறந்ததும் தாங்க முடியாத கூச்சம், வலி. கிட்டத்தட்ட பத்தாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது நாட்களாக மூடியே கிடந்த இமைகளை திறப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இமைகளுக்கு கூடவா துரு பிடிக்கும்? நன்கு கசக்கிவிட்டு மெதுவாக இமை திறந்தேன். வெண்மையான பரப்பு மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. சிறு சத்தமும் இல்லாத சுடுகாட்டு அமைதி. ஒருவேளை பார்வை போய்விட்டதோ, காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதோ? எழுந்து அமர முயற்சித்தேன். முதுகிலும், இடுப்பிலும் மரணவலி.
Monday, August 8, 2011
கருணாநிதி குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல்… உண்மை என்ன?
கடந்த சில தினங்களாகவே பத்திரிகைகளில் அடிபடும் சமாச்சாரம் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து ஜார்ஜ் பெர்ணான்டஸின் தி அதர் சைட் பத்திரிகை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியல்தான்.
Tuesday, July 26, 2011
ஏழை கூலியாளாக மாறும் வருங்கால டாக்டர்!!!
எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?
Tuesday, July 19, 2011
மிஸ்டர் மதுரை
‘மிஸ்டர் மதுரை’…
யார் தெரியுமா? அதிரடிக்குப் புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்!
கடந்த தேர்தலின்போதே பல பரபரப்புகளை ஏற்படுத்திய அவர், புதிய அரசு அமைந்த பிறகு மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட போதே பலரின் புருவம் உச்சந்தலை வரை வியப்பில் வளைந்தது. ‘ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு டோய்’ என்று உற்சாகக் குரல் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கரை புரண்டோடியது.
யார் தெரியுமா? அதிரடிக்குப் புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்!
கடந்த தேர்தலின்போதே பல பரபரப்புகளை ஏற்படுத்திய அவர், புதிய அரசு அமைந்த பிறகு மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட போதே பலரின் புருவம் உச்சந்தலை வரை வியப்பில் வளைந்தது. ‘ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு டோய்’ என்று உற்சாகக் குரல் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கரை புரண்டோடியது.
Wednesday, July 13, 2011
தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்
ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்திமுக ஆட்சியில் இருந்து தப்பிக்க அதிமுக -வை தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏற்கனவே நம்மால் மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று 2006-ல் தூக்கி எறியப்பட்டவர் தான் ஜெயலலிதா.
சென்னை அரசினர் தோட்டத்து ஆலமரப் பிள்ளையாருக்கு அடித்ததே யோகம்
சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் (புதிய தலைமைச் செயலகம்) ஓர் ஆலமரம் - அதன் அடியில் விநாயகர் அய்ம்பதாண்டு காலமாக இருந்து வருகிறதாம்.
இப்பொழுது அதற்குப் புதியதோர் தல புராணம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆலமரத்தின் வேரிலிருந்து இயற்கையாக அந்தப் பிள்ளையார் தோன்றியதாம். அதனால் அதற்கு இயற்கை விநாயகர் என்று பெயராம்.
Tuesday, July 5, 2011
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 15 முதல் செயல்படத் தொடங்கிவிட்டன. சுமார் 20 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி நடத்திய திடீர் ஆய்வின்போது தெரியவந்த அதிர்ச்சியான தகவல்: பள்ளிகளின் குடிநீர்த் தொட்டிகள் ஒன்றுகூட கழுவப்படவில்லை, பள்ளியின் கழிப்பறைகள் தண்ணீரே இல்லாமல் மோசமான நிலையில் காணப்பட்டன.
Saturday, July 2, 2011
நல்ல நியாயம்!!
1993-94-ம் ஆண்டுகளின் போதும் முதல்வராக இருந்த ஜெ. அப்போது சொத்து வரியை கணக்கில் காட்டவில்லையாம். அவர் பதவி போன பிறகு தி.மு.க. ஆட்சியில் 1996-ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்த்ரேட் கோர்ட்டில் சொத்து வரி உதவி ஆணையர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி (வழக்கம் போல) ஜெ. மனு கொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது காற்று மீண்டும் ஜெ. பக்கம் வீசத் தொடங்கியிருக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ. தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்று சொத்து வரி வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார்.
“1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.” என்று ஜெ. மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல ஆடிட்டர்கள்! நல்ல நியாயம்!! -Thanks tamilpaper
இப்போது காற்று மீண்டும் ஜெ. பக்கம் வீசத் தொடங்கியிருக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ. தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்று சொத்து வரி வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார்.
“1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.” என்று ஜெ. மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல ஆடிட்டர்கள்! நல்ல நியாயம்!! -Thanks tamilpaper
Saturday, June 18, 2011
ஆம்னி பஸ் அலட்சியம்
சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் மற்றும் ஒரே ஒரு பயணியைத் தவிர மீதமிருந்த 23 பேரும் உடல் கருகி அகால மரணமடைந்திருக்கின்றனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
Tuesday, June 14, 2011
தேவை போக்குவரத்து துறையில் ஒரு புரட்சி!
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மிக குறைந்த பயணக்கட்டணம் அரசு போக்குவரத்து கழகத்தால் வசூலிக்கபடுகிறது என்பது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், இந்த சேவையின் தரம் என்பதை பார்த்தால் கர்நாடகாவின் சேவையின் பத்தில் இரண்டு சதவிகிதம் கூட கிடையாது. அரசு பேருந்துகளில் பயணக்கட்டணம் மட்டும் குறைந்த அளவில் இருந்தால் மக்கள் வேறு எதுவும் கேட்க மாட்டார்கள் என்பது போன்ற ஒரு மாய கண்ணோட்டத்தில் சிறு பல அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் சம்பாதிக்க எதுவாக தரம் என்கின்ற ஒரு விஷயத்தை அறவே மறந்துவிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு புறவாசல் வழியாக அனுமதி வழங்கியும், அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத பேருந்துகளுக்கும் பணம் வாங்கி கண்டுகொள்ளாமல் இருப்பதும்
Monday, June 13, 2011
ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?
Saturday, June 11, 2011
பிரதமருக்கு எதற்கு விதிவிலக்கு?
காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்?
Tuesday, June 7, 2011
ஜெயலலித்தாவின் முட்டாள் தனம்
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
Wednesday, May 25, 2011
கூடவே பொறந்தது… என்னிக்கும் மாறாது!
நல்லதோ கெட்டதோ ஒரு விஷயத்தை யார் செய்திருந்தாலும், அதன் தன்மையை அலசிப் பார்த்து செயல்படுத்துவதே நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதா, இந்த ‘அழகோடுதான்’ ஆட்சி செலுத்துவார் என்று அவருக்கு ஆதரவான பத்திரிகைகள் மணியடித்தும் மலர் தூவியும் பஜனை பாடி வந்தன. ஆனால் அதெல்லாம் மடத்தனமான நினைப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரிய வைத்துள்ளார் முதல்வர்.
Friday, May 20, 2011
மாற்றம்… அடுத்தது ஏமாற்றமா ? ஏற்றமா?
ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். தி.மு.கவின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அராஜக ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தமிழக மக்கள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளமல், மௌனப் புரட்சியாக பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
Tuesday, May 10, 2011
ஆண்களின் உலகம்!
அண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்!
Monday, May 9, 2011
ஜெயலலிதா அவர்களுக்கு!
எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு நூலை அது வெளிவரும் முன்பே இடைக்காலத் தடையை நீதிமன்றத்தில் வாங்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் பிரபலமானவர்களின் வாழ்க்கை பற்றிய நூல்களைப் பலரும் எழுதுவது இயல்பானது. ஒரு சில நூல்களே பிரபலத்தின் அங்கீகாரம் பெற்ற சரிதைகளாக இருக்கும். மீதி நூல்களுக்கு யாரும் தடை கோருவது இல்லை. சில ஆயிரம் பேர்களே படிக்கப் போகும் ஒரு புத்தகத்தை கூட சகிக்க முடியாமல் தடை வாங்கும் உங்கள் செயல், உங்கள் மனநிலை மாறவே இல்லை என்பதையே நிரூபிக்கிறது.
Thursday, May 5, 2011
கண்ணிருந்தும் குருடனாய் வாழ்வதை விட கேவலமானது ஒன்றும் இல்லை
நஷ்டம் என்பது நம்முடைய சட்டைப்பையில் இருக்கும் பணத்தை எடுத்தால் மட்டுமே என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த 2 G அலைக்கற்றை இழப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டானதே. அலைக்கற்றை ஒன்றும் கருணாநிதி வீட்டு தோட்டத்திலே பறிக்கப்பட்ட மலர் அல்ல. கனிமொழி எடுத்து கொண்டார் என்று சொன்னால் எனக்கு நட்டம் இல்லை என்று சொல்வதற்கு. இஸ்ரோ கருணாநிதி நடத்தும் கார்பொரேட் கம்பனியும் அல்ல.
சுதந்திரதேவி சிலையை உருவான வரலாறு!
சுதந்திரதேவி சிலையை புகைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும்போது கொஞ்சம் வித்யாசம் தெரிந்தது. நான் நினைத்த அளவுக்கு சுதந்திர தேவி உயரமான ( அமெரிக்க அல்லது ப்ரெஞ்ச்) பெண்ணாக இருக்கவில்லை. கொஞ்சம் சராசரியான இந்தியப் பெண் போல குள்ளமாகவே தோன்றினாள். ஒருவேளை அது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம். பொதுவாக மனிதர்களுக்கு சிலை வைக்கும்போது அசல் அளவில் செய்ய மாட்டார்கள். கூடுதல் உயரம், அகலம் வைத்து செய்தால்தான் தரையிலிருந்து சிலையை அண்ணாந்து பார்க்கும்போது அசல் மனிதரின் அளவிலேயே இருப்பது போலத் தோன்றும். அப்படிப் பார்த்த போது எனக்கு சுதந்திரதேவி சற்று குள்ளமோ என்று தோன்றியது.
Wednesday, May 4, 2011
ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள்!
1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?
2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?
3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?
2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?
3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?
Tuesday, May 3, 2011
குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?
"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா? குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள்? எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.
Saturday, April 30, 2011
பிரபாகரன் 25!
- தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
- அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
Friday, April 29, 2011
வடிவேலு நாக்கில் சனி
சந்திரமுகி படம் துவங்கியபோது, ‘முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க’ என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்திலும் வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு மேற்கொண்ட அளவுக்கு மிஞ்சிய தனி மனிதத் தாக்குதல் காரணமாகவே ராணாவில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன பத்திரிகைகள்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ராணா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு மேற்கொண்ட அளவுக்கு மிஞ்சிய தனி மனிதத் தாக்குதல் காரணமாகவே ராணாவில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன பத்திரிகைகள்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ராணா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
பிஜேபி-ஜே.பி.சி
ஜோஷி…உண்மையிலிய இந்த உழல வெளிய கொண்டு வர நினைக்கவில்லை என்றே தோன்றுகிறது…காரணம்….எல்லாரும் நினைப்பது போல் இது 2008 இல் தொடங்கபட்டது இல்லை…..இது 2001 இல் அம்பானி குழுமர்த்திக்காக அருண் சோரியால் பிஜேபி அட்சியில் உருவாக்கப்பட்டது…..2002 - 2003 இந்திய தணிக்கை குழு பிஜேபி அரசாங்கம் 38000 கோடி இழப்பீடு ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது…ஆனால் அன்றைக்கு எந்த அரசியல் கட்சியோ, பத்திரிகையோ,நீதிமன்றமோ எந்த கேள்வியும் கேட்கவில்லை….. அவ்வளவு ஏன் பிஜேபி அரசாங்கம் அந்த கொள்கையை 2004 வரை தொடர்ந்து பின்பற்றியது….. அன்றைக்கும் அரசியல் கட்சி பயன் அடைந்தது….ஆனால் யாரும் கேள்வி கேட்காததுக்கு காரணம் அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனம் அம்பானி……அன்றைக்கு தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தால் இன்றைக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டு இருக்காது…. இப்போது கூட ஊர் பேர் தெரியாத நிறுவனத்திற்கு பதிலாக அம்பானி நிறுவனம் பெற்று இருந்தால் இன்றைக்கு ஒருவரும் கேள்வி கேட்கமால் வாய் அடைத்து நின்றிருப்பர்.இது தான் உண்மை…. இதோ ஜோஷி கூட ஒரு நல்ல அரசியல்வாதி தான் அனால் பாருங்க 2002 -2003 நடந்த இழப்பீடை பற்றியோ அதற்கு காரணமான பிஜிபி பற்றியோ அந்த குற்றமும் சொல்லவில்லை…
Subscribe to:
Posts (Atom)