ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். தி.மு.கவின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அராஜக ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தமிழக மக்கள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளமல், மௌனப் புரட்சியாக பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், ஊழல், அராஜகம் இதெல்லம எதுவும் இராது என்ற நம்பிக்கையில் ஒன்றும் மக்கள் இப்படி வாக்களித்துவிடவில்லை. இருக்கிற ஆட்சியை சகிக்க முடியாத நிலை வந்தபோது 1996ல் என்ன செய்தார்களோ அதே போலத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். அப்போதும் அது தி.முகவுக்கு ஆதரவான ஓட்டு அல்ல; இப்போதும் அ.தி.மு.கவுக்கு ஆதரவான ஓட்டு அல்ல. மூன்றாவதாக சிறந்த ஒரு மாற்று உருவாகாதவரையி ல் மக்கள் இப்படித்தான் வாக்களிக்க முடியும் என்பதுதான் யதார்த்தம்.-Thanks Thiru gnani avargal.
No comments:
Post a Comment