Saturday, June 18, 2011
ஆம்னி பஸ் அலட்சியம்
சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் மற்றும் ஒரே ஒரு பயணியைத் தவிர மீதமிருந்த 23 பேரும் உடல் கருகி அகால மரணமடைந்திருக்கின்றனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
Tuesday, June 14, 2011
தேவை போக்குவரத்து துறையில் ஒரு புரட்சி!
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மிக குறைந்த பயணக்கட்டணம் அரசு போக்குவரத்து கழகத்தால் வசூலிக்கபடுகிறது என்பது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், இந்த சேவையின் தரம் என்பதை பார்த்தால் கர்நாடகாவின் சேவையின் பத்தில் இரண்டு சதவிகிதம் கூட கிடையாது. அரசு பேருந்துகளில் பயணக்கட்டணம் மட்டும் குறைந்த அளவில் இருந்தால் மக்கள் வேறு எதுவும் கேட்க மாட்டார்கள் என்பது போன்ற ஒரு மாய கண்ணோட்டத்தில் சிறு பல அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் சம்பாதிக்க எதுவாக தரம் என்கின்ற ஒரு விஷயத்தை அறவே மறந்துவிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு புறவாசல் வழியாக அனுமதி வழங்கியும், அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத பேருந்துகளுக்கும் பணம் வாங்கி கண்டுகொள்ளாமல் இருப்பதும்
Monday, June 13, 2011
ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?
Saturday, June 11, 2011
பிரதமருக்கு எதற்கு விதிவிலக்கு?
காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்?
Tuesday, June 7, 2011
ஜெயலலித்தாவின் முட்டாள் தனம்
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
Subscribe to:
Posts (Atom)