Tuesday, June 14, 2011

தேவை போக்குவரத்து துறையில் ஒரு புரட்சி!

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மிக குறைந்த பயணக்கட்டணம் அரசு போக்குவரத்து கழகத்தால் வசூலிக்கபடுகிறது என்பது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், இந்த சேவையின் தரம் என்பதை பார்த்தால் கர்நாடகாவின் சேவையின் பத்தில் இரண்டு சதவிகிதம் கூட கிடையாது. அரசு பேருந்துகளில் பயணக்கட்டணம் மட்டும் குறைந்த அளவில் இருந்தால் மக்கள் வேறு எதுவும் கேட்க மாட்டார்கள் என்பது போன்ற ஒரு மாய கண்ணோட்டத்தில் சிறு பல அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் சம்பாதிக்க எதுவாக தரம் என்கின்ற ஒரு விஷயத்தை அறவே மறந்துவிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு புறவாசல் வழியாக அனுமதி வழங்கியும், அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத பேருந்துகளுக்கும் பணம் வாங்கி கண்டுகொள்ளாமல் இருப்பதும்

1) பயணிகளின் உயிருக்கு ஆபத்து,

2) மக்கள் அரசு கட்டணத்தை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம்,

3) ஏற்கனவே மூழ்கிகொண்டுருக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மூடுவிழா நடத்த கூடிய அவலம்

4) அரசு போக்குவரத்து கழக பணியாளர் படும் மன உளர்ச்சி ஆகியவை தொடரும்.

மேலும் நம் அரசாங்க பேருந்துகளை கர்நாடக அரசு பேருந்துகளுடன், அதன் சேவை தரத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற நினைக்கும் முதலமைச்சர் எண்ணம் நிறைவேறாது என்கின்ற ஆதங்கம் வருகிறது. ஆன்லைன் மூலமாக பயணசீட்டு வாங்கும் முறை என்பது கேரளத்திலும் அமலிலிருக்கும் போது, சில இடை தரகர்கள் சம்பாதிக்க எதுவாக நம் போக்குவரத்து துறையை கற் காலத்திலே வைத்திருப்பது மிக தவறு. சிறந்த நாற்காலிகள், தூய்மையான ஜன்னல் சீலைகள், பாதுகாப்பு கருவிகள் என்று எதுவுமே இல்லாமல், வேகத்தடை கருவி மட்டும் பொருத்தி, மூட்டைபூச்சிகளின் தொந்தரவும், அழுக்கான இருக்கைகளும், மூட முடியாத ஜன்னல்களும், ஒழுகும் பேருந்து கூறையுமே இன்று பல அரசு பேருந்தின் நிலை. ஒவ்வொரு இரவு பயணத்திலும் பாவப்பட்ட நடத்துனர் கோவப்பட்ட பயணிகளிடம் தேவையற்ற சண்டை போட்டு மன உளைச்சலுக்கு ஆவது தொடரும் கதை. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜி, போக்குவரத்துக்கு பெயர் போன கரூரை சேர்ந்தவர். இளைஞர். அவர் தம் முதலமைச்சரின் பார்வைக்கு இவ்விஷயங்களை உடனே எடுத்து சென்று, இந்தியாவிலேயே முதல் போக்குவரத்து கழகமாக தமிழ் போக்குவரத்து கழகங்களை மாற்ற வேண்டும்....

-Comment from Dinamalar

No comments:

Post a Comment