Friday, April 29, 2011

வடிவேலு நாக்கில் சனி

சந்திரமுகி படம் துவங்கியபோது, ‘முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க’ என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்திலும் வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு மேற்கொண்ட அளவுக்கு மிஞ்சிய தனி மனிதத் தாக்குதல் காரணமாகவே ராணாவில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன பத்திரிகைகள்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ராணா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

அப்படியெனில் வடிவேலு ராணாவிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி?

விஜயகாந்த் என்பவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆரம்ப நாட்களில் வாய்ப்புகளை தாராளமாக வழங்கியவரும் கூட. இப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் எதிரெதிரே நிற்கின்றனர். ஆனால் இந்த விரோதத்தை ஒரு மாநிலத் தேர்தலுக்கான பிரச்சினையாக வடிவேலு மாற்றிவிட்டார் என இயக்குநர்கள் அமீர், சமுத்திரக்கனி போன்றோர் வெளிப்படையாகவே கண்டித்துள்ளனர். நடிகர் சங்கமும் இதுகுறித்து விரைவில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளதாம்.

‘தாராளமாக வடிவேலு பிரச்சாரம் செய்யட்டும். ஆனால் குஷ்பு சொன்னார் பாருங்கள், ‘எக்காரணம் கொண்டும் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி, கார்த்திக் என சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போனவர்களை தாக்கிப் பேச மாட்டேன். நாளை மீண்டும் இதே சினிமாவுக்குள் நாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டிவரும்’ என்று சொல்லிவிட்டே பிரச்சாரம் செய்தார். அவ்வளவு ஏன்? பாக்யராஜும்தான் விமர்சனம் செய்தார்…. ஆனால் எவ்வளவு நாகரீகமாக அந்த விமர்சனத்தை அவர் மேற்கொண்டார்! ஆனால் வடிவேலு நாக்கில் நரம்பின்றி இஷ்டத்துக்கும் பேசிவிட்டார் அவருக்கு இது வேண்டும்!”, என்கிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.

ஆனால் வடிவேலுவை விட அந்தப் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு சரியாக இருப்பார் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அது என்கிறது ராணா தரப்பு.

தான் எதனால் நீக்கப்பட்டோம் என்ற உண்மை வடிவேலுவுக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆத்திரத்தில் அவர் இப்போதும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துள்ளார்.

ராணா படத்தில் நடிக்க திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே? என இன்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “ராணா படமாக இருக்கட்டும், காணா படமாக இருக்கட்டும், இல்ல வேற எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவே இல்லை. மக்களைச் சென்றடைந்த திட்டங்களை பற்றித்தான் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இது ஒரு தவறா… இதுக்காக என்னை சினிமாவைவிட்டே தூக்கினாலும் கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு காட்சிகள் மாறும். அப்போ பேசிக்கிறேன்,” என்றார்.

ராணா காணாவா… வடிவேலுவோட ஆரம்பம் நல்லாதான் இருந்தது.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா. ஆயிரம் புயல்கள் வரலாம். ஓரிரு நாளில் வலுவிழந்து கரையொதுங்கி காணாமல் போகலாம். ஆனால் ‘துருவ நட்சத்திரம்’ எதையும் கண்டுகொள்வதில்லை. அதற்கு வழிகாட்டித்தான் பழக்கம்.

நாவடக்கம் தேவை வடிவேலு… யார் கண்டது? மனோரமாவை ரட்சித்த இதே ‘ராணா’வால்தான் உங்களுக்கு மறுபிரவேசம் என்றிருந்தால் அதை மாற்றி எழுதவா முடியும்!-Source http://www.envazhi.com

No comments:

Post a Comment