Sunday, September 18, 2011
Monday, August 22, 2011
இந்தியா 2041
படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தேன். கண்களை திறந்ததும் தாங்க முடியாத கூச்சம், வலி. கிட்டத்தட்ட பத்தாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது நாட்களாக மூடியே கிடந்த இமைகளை திறப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இமைகளுக்கு கூடவா துரு பிடிக்கும்? நன்கு கசக்கிவிட்டு மெதுவாக இமை திறந்தேன். வெண்மையான பரப்பு மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. சிறு சத்தமும் இல்லாத சுடுகாட்டு அமைதி. ஒருவேளை பார்வை போய்விட்டதோ, காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதோ? எழுந்து அமர முயற்சித்தேன். முதுகிலும், இடுப்பிலும் மரணவலி.
Monday, August 8, 2011
கருணாநிதி குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல்… உண்மை என்ன?
கடந்த சில தினங்களாகவே பத்திரிகைகளில் அடிபடும் சமாச்சாரம் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து ஜார்ஜ் பெர்ணான்டஸின் தி அதர் சைட் பத்திரிகை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியல்தான்.
Tuesday, July 26, 2011
ஏழை கூலியாளாக மாறும் வருங்கால டாக்டர்!!!
எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?
Tuesday, July 19, 2011
மிஸ்டர் மதுரை
‘மிஸ்டர் மதுரை’…
யார் தெரியுமா? அதிரடிக்குப் புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்!
கடந்த தேர்தலின்போதே பல பரபரப்புகளை ஏற்படுத்திய அவர், புதிய அரசு அமைந்த பிறகு மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட போதே பலரின் புருவம் உச்சந்தலை வரை வியப்பில் வளைந்தது. ‘ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு டோய்’ என்று உற்சாகக் குரல் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கரை புரண்டோடியது.
யார் தெரியுமா? அதிரடிக்குப் புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்!
கடந்த தேர்தலின்போதே பல பரபரப்புகளை ஏற்படுத்திய அவர், புதிய அரசு அமைந்த பிறகு மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட போதே பலரின் புருவம் உச்சந்தலை வரை வியப்பில் வளைந்தது. ‘ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு டோய்’ என்று உற்சாகக் குரல் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கரை புரண்டோடியது.
Wednesday, July 13, 2011
தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்
ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்திமுக ஆட்சியில் இருந்து தப்பிக்க அதிமுக -வை தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏற்கனவே நம்மால் மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று 2006-ல் தூக்கி எறியப்பட்டவர் தான் ஜெயலலிதா.
சென்னை அரசினர் தோட்டத்து ஆலமரப் பிள்ளையாருக்கு அடித்ததே யோகம்
சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் (புதிய தலைமைச் செயலகம்) ஓர் ஆலமரம் - அதன் அடியில் விநாயகர் அய்ம்பதாண்டு காலமாக இருந்து வருகிறதாம்.
இப்பொழுது அதற்குப் புதியதோர் தல புராணம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆலமரத்தின் வேரிலிருந்து இயற்கையாக அந்தப் பிள்ளையார் தோன்றியதாம். அதனால் அதற்கு இயற்கை விநாயகர் என்று பெயராம்.
Subscribe to:
Posts (Atom)