Wednesday, May 25, 2011
கூடவே பொறந்தது… என்னிக்கும் மாறாது!
நல்லதோ கெட்டதோ ஒரு விஷயத்தை யார் செய்திருந்தாலும், அதன் தன்மையை அலசிப் பார்த்து செயல்படுத்துவதே நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதா, இந்த ‘அழகோடுதான்’ ஆட்சி செலுத்துவார் என்று அவருக்கு ஆதரவான பத்திரிகைகள் மணியடித்தும் மலர் தூவியும் பஜனை பாடி வந்தன. ஆனால் அதெல்லாம் மடத்தனமான நினைப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரிய வைத்துள்ளார் முதல்வர்.
Friday, May 20, 2011
மாற்றம்… அடுத்தது ஏமாற்றமா ? ஏற்றமா?
ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். தி.மு.கவின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அராஜக ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தமிழக மக்கள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளமல், மௌனப் புரட்சியாக பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
Tuesday, May 10, 2011
ஆண்களின் உலகம்!
அண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்!
Monday, May 9, 2011
ஜெயலலிதா அவர்களுக்கு!
எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு நூலை அது வெளிவரும் முன்பே இடைக்காலத் தடையை நீதிமன்றத்தில் வாங்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் பிரபலமானவர்களின் வாழ்க்கை பற்றிய நூல்களைப் பலரும் எழுதுவது இயல்பானது. ஒரு சில நூல்களே பிரபலத்தின் அங்கீகாரம் பெற்ற சரிதைகளாக இருக்கும். மீதி நூல்களுக்கு யாரும் தடை கோருவது இல்லை. சில ஆயிரம் பேர்களே படிக்கப் போகும் ஒரு புத்தகத்தை கூட சகிக்க முடியாமல் தடை வாங்கும் உங்கள் செயல், உங்கள் மனநிலை மாறவே இல்லை என்பதையே நிரூபிக்கிறது.
Thursday, May 5, 2011
கண்ணிருந்தும் குருடனாய் வாழ்வதை விட கேவலமானது ஒன்றும் இல்லை
நஷ்டம் என்பது நம்முடைய சட்டைப்பையில் இருக்கும் பணத்தை எடுத்தால் மட்டுமே என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த 2 G அலைக்கற்றை இழப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டானதே. அலைக்கற்றை ஒன்றும் கருணாநிதி வீட்டு தோட்டத்திலே பறிக்கப்பட்ட மலர் அல்ல. கனிமொழி எடுத்து கொண்டார் என்று சொன்னால் எனக்கு நட்டம் இல்லை என்று சொல்வதற்கு. இஸ்ரோ கருணாநிதி நடத்தும் கார்பொரேட் கம்பனியும் அல்ல.
சுதந்திரதேவி சிலையை உருவான வரலாறு!
சுதந்திரதேவி சிலையை புகைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும்போது கொஞ்சம் வித்யாசம் தெரிந்தது. நான் நினைத்த அளவுக்கு சுதந்திர தேவி உயரமான ( அமெரிக்க அல்லது ப்ரெஞ்ச்) பெண்ணாக இருக்கவில்லை. கொஞ்சம் சராசரியான இந்தியப் பெண் போல குள்ளமாகவே தோன்றினாள். ஒருவேளை அது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம். பொதுவாக மனிதர்களுக்கு சிலை வைக்கும்போது அசல் அளவில் செய்ய மாட்டார்கள். கூடுதல் உயரம், அகலம் வைத்து செய்தால்தான் தரையிலிருந்து சிலையை அண்ணாந்து பார்க்கும்போது அசல் மனிதரின் அளவிலேயே இருப்பது போலத் தோன்றும். அப்படிப் பார்த்த போது எனக்கு சுதந்திரதேவி சற்று குள்ளமோ என்று தோன்றியது.
Wednesday, May 4, 2011
ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள்!
1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?
2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?
3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?
2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?
3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?
Tuesday, May 3, 2011
குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?
"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா? குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள்? எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.
Subscribe to:
Posts (Atom)