எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு நூலை அது வெளிவரும் முன்பே இடைக்காலத் தடையை நீதிமன்றத்தில் வாங்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் பிரபலமானவர்களின் வாழ்க்கை பற்றிய நூல்களைப் பலரும் எழுதுவது இயல்பானது. ஒரு சில நூல்களே பிரபலத்தின் அங்கீகாரம் பெற்ற சரிதைகளாக இருக்கும். மீதி நூல்களுக்கு யாரும் தடை கோருவது இல்லை. சில ஆயிரம் பேர்களே படிக்கப் போகும் ஒரு புத்தகத்தை கூட சகிக்க முடியாமல் தடை வாங்கும் உங்கள் செயல், உங்கள் மனநிலை மாறவே இல்லை என்பதையே நிரூபிக்கிறது.
ஒருவேளை தி.முக.வே மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது முக்கியமானது. ரிப் வான் விங்கிள் போல அடுத்த ஐந்தாண்டுகள் தூங்கி எழுந்து தேர்தல் நேரத்தில் வந்தீர்களானால், கட்சியே காணாமல் போயிருக்கும். உண்மையில் 2011 தேர்தல் தி.மு.கவுக்கு மட்டும் வாழ்வா சாவா தேர்தல் அல்ல. உங்கள் கட்சிக்கும்தான். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் எழுபதை எட்டிப் பிடிப்பீர்கள். இதர கட்சிகளிலெல்லாம் இளைய தலைமுறைத் தலைவர்கள் அதிகமாகியிருப்பார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ன ஆகும் என்ற கேல்வி எழுந்தபோது நீங்கள் பதிலாகக் கிடைத்தீர்கள். உங்களுக்கு அடுத்து யார் என்றால் யாரும் இல்லை, சசிகலாதான் என்றால் அ.தி.மு.கவை வேகமாக அழிக்க அதை விட சிறந்த வழி இல்லை.-Thanks gnani avargal
No comments:
Post a Comment